இஸ்லாம், அல்லாஹ்வை அவமதிக்கும் பேச்சு: வழக்கிலிருந்து விடுதலையானார் ஞானசார தேரர்

Published By: Vishnu

10 Dec, 2021 | 07:07 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

' ஒரே நாடு - ஒரே சட்டம் ' ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர், இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவமதித்து மத ஒற்றுமையை சீர் குலைக்கும் வண்ணம் கருத்து வெளியிட்டமை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 

கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல இவ்வாறு அவரை விடுதலை செய்தார்.

ஞானசார தேரருக்கு எதிரான குறித்த விவகார வழக்கினை முன்னெடுத்துச் செல்வதில்லை என சட்ட மா அதிபர் தீர்மானித்து, அவரை விடுதலை செய்ய வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய,  ஞானசார தேரரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதான நீதிவான் அறிவித்தார்.

பொலன்னறுவை,  சின்னவலப்பட்டியிலும் மெஹரகொடலெல்ல பகுதியிலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவமதிக்கும் வண்ணமும் மத ஒற்றுமையை சீர் குலைக்கும் வண்ணமும் கருத்து வெளியிட்டமை தொடர்பில்  பொதுபல சேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக  வழக்கில் முறைப்பாடு திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு கடந்த 2017 ஆகஸ்ட் 2 ஆம் திகதி  கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த்து.

கடந்த  2017 ஜூன் மாதம் 21 ஆம் திகதி திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவில் சரணடைந்ததை அடுத்து  ஞானசார தேரருக்கு எதிராக  73465 எனும் இலக்கத்தின் கீழ்  இந்த வழக்கு விசாரணைக்கு  எடுக்கப்பட்டிருந்தது.

 ஞானசார தேரருக்கு எதிராகதண்டனை சட்டக் கோவையின் 291 (அ), (ஆ) அத்தியாயங்களின் கீழும்  120 ஆவது அத்தியாயத்தின் கீழும் இவ்வழக்கு தாக்கல்ச் செய்யப்பட்டிருந்தது.

அவ்வழக்கில்   10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல கலகொட அத்தே ஞானசார தேரர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 அத்துடன் ஞானசார தேரருக்கோ அவர் சார்ந்த பொது பல சேனா அமைப்புக்கோ வேறு இன, மதங்களை துற்றும் வகையில், வெறுப்பூட்டும்  வகையில் கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்து இருக்குமாறு கடுமையாக  நீதிவானினால் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே, இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள், இன்று ( 10) கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே, சட்ட மா அதிபரின் ஆலோசனை நீதிவானுக்கு அரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரவின் கொழும்பில்...

2024-10-14 00:14:51
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52
news-image

நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல...

2024-10-13 19:02:11