கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கபுக்கலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பள உயர்வினை வழங்க கோரி முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக ஆர்பாட்டமொன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.  

இன்று காலை 1500 இற்;கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கண்டி நுவரெலியா பிரதான பாதையை தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் கண்டி நுவரெலியா பாதை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வாகன சாரதிகளும் பயணிகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

இதேவேளை போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.