(எம்.மனோசித்ரா)
நாட்டில் ஒமிக்ரோன் பிறழ்வு எந்தளவிற்கு பரவியுள்ளது என்பதை உறுதியாகக கூற முடியாது. அதே போன்று அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களும் எவ்வாறு அமையும் என்பதையும் கணிப்பிட முடியாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எனவே ஒமிக்ரோன் மாத்திரமல்ல , எந்தவொரு பிறழ்வானாலும் அது பாரியளவில் பரவுவதற்கு இடமளிக்காமல் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
12 - 15 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கலுக்கும் , 16 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கலுக்கும் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்களுக்கும் பைசர் தடுப்பூசியே வழங்கப்படும். ஆனால் அந்த வேலைத்திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படமாட்டாது. கல்வி அமைச்சுடன் இணைந்து திட்டமிடப்பட்ட பின்னரே அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.
அதே போன்று தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் சுற்றுலாத்துறையில் தற்போது நடைமுறையிலுள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பிலான புதிய சுற்று நிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM