பிரபல போதைப்பொருள் வர்த்தகர்  என அடையாளப்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெலே சுதாவின் வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட பிணை மனுவை நிராகரிப்பதாகவும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி நிசாங்க பந்துல்ல கருணாரத்ன பிறப்பித்துள்ளார்.

190 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருளை நாட்டில் விற்பனை செய்ததாக  தெரிவித்து வெலே சுதாவுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன், வெலே சுதா மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.