அவசர சிகிச்சை பிரிவில் நாடு - எதிர்க்கட்சி சபையில் சாடல்

Published By: Vishnu

10 Dec, 2021 | 03:36 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இந்த நாட்டை 'வன் மேன் ஷோ'வினால் மீட்டெடுக்க முடியாது. அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது, இதற்கு ராஜபக்ஷவினரின் பொதுஜன முன்னணி அரசாங்கமே காரணம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சபையில் தெரிவித்தார்.

No description available.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சு ,பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு ,நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு,சமுர்த்தி உள்ளக பொருளாதார ,நுண்நிதிய ,சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்தை கையில் எடுத்ததில் இருந்து நாட்டின் சகல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது, பொருளாதாரம் சரிந்துவிட்டது. மக்களை வரிசையில் நிற்கவைத்து விடீர்கள். நாடே நிதி நெருக்கடிக்குள் வீழ்ச்சிகண்டு விட்டது. வரவு செலவு திட்டத்தை கூட கடன்களில் கையாள வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் நாடு கடன்களில் சிக்க ஆரம்பித்தது. அப்போதைய நிதி அமைச்சர் இன்று பிரதமர், அப்போதைய மத்திய வங்கி ஆளுநரே இன்றும் ஆளுநராக உள்ளார். இவர்களினால் மீண்டும் அதே பயணத்தை மட்டுமே முன்னெடுக்க முடியும்.

உலகில் உள்ள நாடுகளில் தமது வெளிநாட்டு கையிருப்பை ஒரு பில்லியனுக்கும் குறைவாக கொண்டுள்ள நாடொன்று இருக்கும் என்றால் அது இலங்கை என பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்தளவு மோசமான நிலைக்கு நாடு சென்றுள்ளது. இந்த நிலையில் எந்த நாடும் எமக்கு கடன் கொடுக்காது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலர் நாட்டின் நிலைமைகளை விமர்சித்துவிட்டு இப்போது வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க முடியுமா. இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரித்தால் நாடு விரைவாக நாசமடையும். அவ்வாறான திட்டங்களே இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளது. குறுகிய கால திட்டங்களை சமர்பித்து நாட்டின் நிதி நெருக்கடியை கையாள முடியாது. நாடு இதனை தாண்டிய பாரிய பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. எமது பிணைகளை கூட பெற்றுக்கொள்ள எவரும் தாயரில்லை. அப்படியே பெற்றுக்கொள்ள வந்தாலும் அவர்கள் கறுப்புப்பண வியாபாரிகளேமட்டுமே வருவார்கள்.

அவ்வாறான கறுப்புப் பணக் கோஷ்டியொன்று 2022 ஆம் ஆண்டில் நாட்டை ஆக்கிரமிக்கப்போகின்றது என்ற தகவலும் எமக்கு கிடைத்துள்ளது. இந்த நாட்டை 'வன் மேன் ஷோ' வினால் மீட்டெடுக்க முடியாது. அந்த மனநிலையில் இருந்து விடுபட முடியும். நாடு அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே நாட்டை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47