மக்கள் பார்வைக்காக 7 கப்பல்கள் கொழும்பு காலி முகத்திடலில் நங்கூரம்

Published By: Digital Desk 2

10 Dec, 2021 | 01:20 PM
image

எம்.மனோசித்ரா

போர் காலத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கஜபா என்ற கப்பல் தற்போது போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. 

71 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் கடற்படையின் முக்கிய கப்பலாக இந்த கஜபாகு கப்பல் காணப்படுவதாக அதன் கட்டளையதிகாரி கெப்டன் பி.சி.எம்.ஏ.டி.பெரேரா தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடற்படையின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு - காலிமுகத்திடல் கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான 7  சிறப்பு கப்பல்கள் நங்கூரமிடப்பட்டு மக்களுக்கு காட்சியப்படுத்தப்பட்டன.

இதனை நாட்டு மக்களுக்கு விரிவாக அறியப்படுத்தும் வகையில் ஊடகவியலாளர் கப்பலுக்கு அழைத்து செல்லப்பட்டு தெளிவுப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 'கஜபாகு' கப்பல் பிரதானமானதாகும்.

இக்கப்பல் யுத்த காலகட்டத்தில் கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.

அத்தோடு கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கண்காணிப்புக்களிலும் இக்கப்பல் ஈடுப்படுத்தப்படுகிறது.

இந்தக் கப்பலில் 180 கடற்படையினரை அழைத்துச் செல்லக் கூடிய திறன் உடையதாகும்.

எனினும் தற்போது 140 கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு மாத காலத்திற்கு எவ்வித தடங்கலும் இன்றி கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவாறான வசதிகளை உள்ளடக்கியதாக இக்கப்பல் காணப்படுகிறது. 

அதற்கமைய ஆழ்கடலில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி இக்கப்பல் ஊடாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்  என கட்டளையதிகாரி கெப்டன் பி.சி.எம்.ஏ.டி.பெரேரா தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44