ஒஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் முதன்முதலாக சென்னையிலும் கோவையிலும் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்ற பின்னர் இந்தியாவைத் தவிர்த்து ஏராளமான வெளிநாடுகளில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். ஆனால் இது வரை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தியது இல்லையாம். அந்த குறையைப்போக்கும் விதத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதியன்று சென்னையிலும், ஜனவரி மாதம் 23 ஆம் திகதியன்று கோவையிலும் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறாராம். இதில் முன்னணி பாடகர்கள் மற்றும் ஏராளமான இசை கலைஞர்கள் பங்குபற்றுகிறார்கள். 

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதில் தனிகவனம் செலுத்தி வருகிறாராம் ஏ.ஆர் ரஹ்மான். இதற்கான முதல் பதாகையும் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. நெஞ்சே எழு என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நேரலை நிகழ்ச்சி வெற்றிபெறும் என்றே அவரது இரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்