ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவுக்கு பாதுகாப்பு அமைச்சு இரங்கல் 

By T Yuwaraj

10 Dec, 2021 | 12:41 PM
image

(செய்திப்பிரிவு)

இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி  ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் துயர மரணத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இரங்கல் தெரிவித்துள்ளார்.

No description available.

அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்கள் மற்றும் இலங்கை முப்படையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குன்னூரில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில்  உயிரிழந்த ஏனைய இந்திய இராணுவ வீரர்களிக் குடும்பங்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right