சிதம்பரத்தில் ஆசைக்கு இணங்காத மருமகளின் வாயில் விஷத்தை ஊற்றி அவரை கொலை செய்ய முயன்றுள்ளார் அந்த பெண்ணின் மாமனார். இதற்கு அந்த பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்தது தான் அவலம்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனனிக்கு திருமணம் ஆனது. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. திருமணமானதில் இருந்தே ஜனனி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்தார். அவரது மாமனார் அவருக்கு பாலியல் ரீதியாக பல தொந்தரவுகள் செய்து வந்துள்ளார். தனது கணவரிடம் இது குறித்து கூறினாலும் அவர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் ஜனனியை அவரது மாமனார் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால் இதற்கு ஜனனி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஜனனியின் கணவருடன் சேர்ந்து ஜனனியின் வாயில் விஷத்தை ஊற்றி உள்ளனர்.

இதனை அறிந்த ஜனனியின் தம்பி நியாயம் கேட்டு வந்தவரையும் இவரும் கட்டி வைத்து அடித்துள்ளனர். மாமனார் மற்றும் கணவரின் வக்கிர செயல் குறித்து ஜனனி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.