பிபின் ராவத்தின் இறுதி சடங்கில் பங்கேற்ற புதுடெல்லி பயணமானார் இராணுவ தளபதி

Published By: Vishnu

10 Dec, 2021 | 10:19 AM
image

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இராணுவ இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (10) அதிகாலை புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். 

ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தியாவில் உள்ள தனது சக தலைவரின் துயரமான மறைவு குறித்து கேள்விப்பட்டு, ஊடகங்களுக்கும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கும் வெளியிட்ட விசேட இரங்கல் செய்தியில் ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் புதன்கிழமை இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேற்று காலை வெலிங்டன் எம்.ஆர்.சி. இராணுவ முகாமில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

முதலமைச்சர் மு.க.ஸ் டாலின், இராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

அங்கு இன்று மாலை 4.00 மணிக்கு ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது துணைவியார் திருமதி மதுலிகா ராவத்தின் உடல் ப்ரார் சதுக்கத்தில் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் குற்றங்களால் சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள்...

2026-09-07 13:59:34
news-image

பல்கலைக்கழக பணியாளர் ஆட்சேர்ப்பை மாதாந்தம் மீளாய்வு...

2026-09-07 12:16:09
news-image

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கும்...

2026-09-07 19:12:32
news-image

எல் நினோவால் கடல்வாழ் பாலூட்டிகளின் உணவுப்...

2026-09-07 19:08:28
news-image

போலி உரிமைப் பத்திரம் மூலம் காணி...

2026-09-07 19:01:04
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரசாங்கத்தின் எதிர்காலத்தை...

2026-09-07 18:57:01
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம்...

2026-09-07 18:30:59
news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25