(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பயங்கரவாத தடைச்சட்டமும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாய (ஐ.சி.சி.பீ.ஆர்) சட்டமும் சிறுபான்மையினருக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற நீதி அமைச்சு,இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு,தொழில்நுட்ப அமைச்சு,அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு,கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாகிஸ்தானில் இலங்கை பிரஜை ஒருவர் கொல்லப்பட்டமை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.இந்த குரூரமான கொலை மதத்தின் பெயரால் நடந்துள்ளது. அப்பாவி நபர் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் துரிதமாக தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரும் இதனை வரவேற்றுள்ளார்.இனியும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்கூடாது.
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட அனைத்து நாடுகளும் பின்வாங்கிய போது எமது அணி அங்கு சென்று விளையாடியது. பயங்கரவாதத் தாக்குதலுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. இதனையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் சுமந்திரன் எம்.பி உரையாற்றுகையில், நீதி அமைச்சர் ராஜினாமா செய்யமுயன்று பின்வாங்கியதாக தெரிவித்தார். அமைச்சருக்கு ராஜினாமா செய்யுமாறும் அவர் கோரினார்.ஆனால் நான் அவ்வாறு கோர மாட்டேன். அரசாங்கத்தில் இருந்தவாறு போராடுமாறே கோருகிறேன்.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டமும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாய (ஐசிசிபீஆர்) சட்டமும் சிறுபான்மையினருக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக இன்னும் எந்த குற்றம் சாட்டும் இல்லாமல் நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் இருக்கின்றனர். இன்னும் சிலர் நீண்ட நாட்களுக்கு பின்னர் அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பாக அஸாத் சாலி ஊடக மாநாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக கைதாகி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டார். ஆனால் அவர் சொல்லாத வியத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் மீது வழக்கு தொடர்பட்டது நீதிமன்றத்தில் நிரூபனமானது.நானும் இரு தடவைகள் நீதிமன்றம் சென்றேன். தவறான முறைப்பாடு செய்த எம்.பிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயங்களில் சட்டமா அதிபர் நியாயமாக செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM