ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்குங்கள் - ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்

By T Yuwaraj

09 Dec, 2021 | 09:57 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சிறை தண்டனை அனுபவிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய நீதி அமைச்சர் ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் கோரிக்கை முன்வைத்தனர்.

இராணுவத்தை மாத்திரம் தண்டித்தால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் - ஐக்கிய மக்கள் சக்தி | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9), இடம்பெற்ற நீதி அமைச்சு,இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு,தொழில்நுட்ப அமைச்சு,அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு,கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, டிஜிட்டல் தொழில்நுட்பம்  மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் மயந்த திசாநாயக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவின் விடுதலை குறித்த வலியுறுத்தல் ஒன்றினை சபையில் முன்வைத்தார். 

அவர் கூறுகையில்,

நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றேன். என்னவென்றால், ரஞ்சன் ராமநாயக குறித்து நீங்கள் விசேட கவனம் செலுத்துங்கள்.

அவருக்கு பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்துங்கள். நாம் அவ்வாறான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளோம் என்பதை ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மனு ஒன்றினை முன்வைக்கவுளோம் என்றார்.

காவிந்த ஜெவர்தன எம்.பி இது குறித்து சபையில் கூறுகையில் :- ஒரு ஆண்டுகாலமாக ரஞ்சன் ராமநாயக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

அவரை விடுதலை செய்ய நீதி அமைச்சர் கூடிய கவனம் செலுத்துவதுடன் ஜனாதிபதிக்கு இதனை வலியுறுத்த வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right