கொவிட்-19 தொற்று காரணமாக நாட்டில் மேலும் 22 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14,555 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம் இலங்கையில் இன்று வரை 508 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 570,436 ஆக உயர்வடைந்துள்ளது.