திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை 99 ஆம் கட்டை சந்தியில் இன்று (09) மதியம், பெற்றோல் விற்கும் கடை ஒன்று தீப்பற்றியதில் குறித்த கடை முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெற்றோல் கடையில் கடையின் உள் பகுதியில் சோளக் கதிரை தீமூற்றி அடுப்பில் வைத்திருந்த நிலையில் பெற்றோல் தீப்பிடித்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனை  மூலம் தெரியவருகிறது. பிரதேச வாசிகள் இணைந்து  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதில் கடை உரிமையாளரான இரு பிள்ளைகளின் தாய் தீக்காயங்களுக்கு உள்ளானதுடன் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு தடயவியல் பொலிசார் சென்று விசாரனைகளை முன்னெடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.