அடுத்த வருடமும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அடுத்த வருடமும் அரச துறைக்கான புதிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் பால் மா இறக்குமதியும் கட்டுப்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், அந்நிய செலாவணி பற்றாக்குறையின் தீவிரத்தன்மையே இந்த தீர்மானங்களை எடுக்கக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.