2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நாடுகளுக்கு, "தவறான செயல்களுக்கு விலை கொடுக்கப்படும்" என்று சீனா எச்சரித்துள்ளது.

A person cycles past a Beijing 2022 sign

அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளை அனுப்பாது என்று கூறியுள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் "மனித உரிமை மீறல்கள்" தொடர்பான கவலைகளுக்கு மத்தியில் சர்வதேச நாடுகள் மேற்கண்ட தீர்மானத்தை எடுத்திருந்தன.

இந் நிலையிலேயே சீனா போட்டிகளை புறக்கணிக்கும் நாடுகளுக்கு எச்சரித்துள்ளதுடன், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை அரசியல் சூழ்ச்சிக்கு ஒலிம்பிக் மேடையைப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

பீஜிங்களில் பெப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.