சர்வதேச பொலிஸாரினால் (INTERPOL) தேடப்பட்டு வந்த பிரேசில் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர் 23 வயதுடைய பிரேசில் யுவதி ஆவார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக இவர் குறித்து இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த வேளையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கைது செய்யப்பட்ட அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.