(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்டுத்தி அரசியல் எதிரிகளை கைதுசெய்துவருகின்றது. அதனால் இந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்வாதிகளின் வழக்குகளை தொடர்ந்து வாபஸ் பெற்றுவருவது திணைக்களத்தின் கெளரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதுடன் பாராளுமன்றத்துக்கும் நல்லதில்லை. அதனால் இதுதொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நீதி அமைச்சு, இளைஞர்  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு,கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, டிஜிட்டல் தொழில்நுட்பம்  மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.