Metropolitan Institute of Business Management (MIBM) இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான செல்வரட்ணம் நிமால் அமெரிக்காவிலுள்ள Business World International Organization (BWIO) ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவில் Micro Sector of the Education Industry இன் 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான (CEO) தங்க விருதினை அண்மையில் பெற்றுள்ளார். 

இவ்விருது வழங்கல் விழாவானது கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றதோடு நீர்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கரங்களால் இவ்விருதினை .நிமல்  பெற்றுக்கொண்டார். 

இந்நிகழ்வின் இணை பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்பித்திருந்தார்.

BWIO விருது என்பது நிறுவனங்களது சாதனைகள் மற்றும் அதன் வெற்றிப்பாதைகளை உலகுக்கு வெளிப்படுத்தக்கூடிய ஒரு நிறுவனமாக செயற்படுவதோடு மாத்திரமன்றி இதன் முழுமையான ஆய்வுகள் மற்றும் சிறப்பான தெரிவுச் செயன்முறைகள் காரணமாக உலகெங்கிலும் இவ்விருதிற்கு சிறந்த அங்கீகாரத்துடனான நன்மதிப்பு கிடைக்கப்படுகின்றன.

இத்தெரிவுச் செயன்முறையில் வளர்ச்சி, புத்தாக்கம், பணியிட கலாசாரம், வழங்கப்படும் உற்பத்திகள் மற்றும் சேவைகள், தலைமைத்துவம், வியாபார நெறிமுறைகள், நிர்வாகம்.  சமூகப்பொறுப்பு, நற்பெயர் மற்றும் ஏனைய ஒப்பான மூலக்கூறுகள் என்பன ,தில் உள்ளடக்கப்படுகின்றன.

செல்வரட்ணம் நிமால் Metropolitan Institute of Business Management (MIBM) இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாவார். இங்கு ஏழு முகாமைத்துவ கற்கைநெறிகள், மூன்று புகைப்படம் சார் கற்கைநெறிகள், இரண்டு மொழிகளையுடைய கற்கைநெறிகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்கைநெறிகள் போன்ற பெருமளவு கற்கைநெறிகள் குறித்த துறையில் சிறப்பு நிபுணத்துவமும் அனுபவமும் வாய்ந்த விரிவுரையாளர்களால் கற்பிக்கப்படுகின்றன.

பெருநிறுவன குழுமங்களின் முகாமைத்துவ துறையில் 30 ஆண்டுகால அனுபவத்தை உடைய இவர் தொழிற்துறையில் பொறியியலாளராவதோடு சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார நிர்வாகத்திலும் சிறப்புத் தேர்ச்சியினை உடையவர். PhotoKina Limited (KG Group) இல் உற்பத்தி முதல் தொழில்நுட்ப முகாமையாளராகவும், Hayleys Consumer Product Limited இன் வணிகப் பிரிவின் தலைவராகவும் Photo Technica Pvt Ltd இல் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பிரிவின் வியாபார நிர்வாகத்திலும் (இந்தியா), பொது முகாமைத்துவத்திலும் (அமெரிக்கா) இரண்டு சிறப்பு முதுமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார். அத்துடன் முகாமைத்துவம் மற்றும் புகைப்படம் சார் கற்கைகளுக்கு விரிவுரையாளராக பணியாற்றியுள்ளதோடு இலங்கை மற்றும் இந்தியாவில் தலைமைத்துவ கருத்தரங்குகளையும் மேற்கொண்டுள்ளார்.

சர்வதேச லயன்ஸ் கழகத்தில் செயற்படு உறுப்பினராவதோடு செல்வரட்ணம் நிமால் அவர்கள் சர்வதேச லயன்ஸ் கழகத்தால் வழங்கப்படும் மூன்று தலைமைத்துவ கௌரவப் பதக்கங்களையும் பெற்றுள்ளார். 2013ஆம் ஆண்டு அவரது சிறந்த சமூக சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு தேசமான்ய என்ற மதிப்புமிக்க தேசிய பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  மேலும் 2021ஆம் ஆண்டு அகில ,லங்கை சமாதான நீதவானாகவும் நியமிக்கப்பட்டார்.

சிறந்த பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற விருதை பெற்றுள்ள நிமால் அவர்கள் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

ஒன்லைன் கற்கையே எதிர்காலம் என்பதை நாங்கள் அடையாளங் கண்டுள்ளதோடு கொரோனா நோய்த்தொற்றானது முழுமையாக நீங்கப்பட்டாலும், இவ் ஒன்லைன் கற்கையானது நிறுத்தப்படமாட்டாது என்று கூறியுள்ளார். 

மேலும் MIBM ஒன்லைன் கற்கைகளுக்கு தமது முதலீடுகளை உட்செலுத்தியுள்ளதோடு தொற்று நோய்க்கு முன்பிருந்ததைப் போலல்லாது தற்பொழுது நாடு பூராகவும் உள்ள மாணவர்கள் ஒன்லைன் கற்கைகளுக்கு விருப்பத்துடன் சமூகமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்ப நாட்களில் ஒன்லைன் கற்கைகளில் மாணவர்களதும் விரிவுரையாளர்களதும் அணுகுமுறைகள் மற்றும் மனநிலைகள் வேறுபட்டதாக காணப்பட்டாலும் முறையான பயிற்சிகள் மூலம் அவர்கள் தங்களை ,சைவாக்கப்படுத்திக்கொண்டனர்.

மேலும் MIBM ஆனது தலைமைத்துவ ,லக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதோடு நாட்டின் முன்னேற்றத்திற்கு தலைமைத்துவ பண்புகளுடனான எதிர்கால முகாமையாளர்களை தயார்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றது என்றும் குறிப்பிட்டார். 

சிறந்த வணிக உத்திகளால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அதற்கு சிறந்த தலைவர்கள் தேவை. அதனையே MIBM மேற்கொள்கின்றது என்றும் குறிப்பிட்டார். தற்பொழுது வெளிநாட்டு விருது வழங்கும் நிறுவனத்துடன் Strategic Partnrship இனை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் MIBM இம்மைல்கல்லை அடையும் என்றும் நிமால் அவர்கள் குறிப்பிட்டார். 

இவரின் தலைமைத்துவத்தின் கீழ் MIBM இன் கற்கைகளானது ஒன்று முதல் பதினைந்தாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை மற்றும் இந்து கல்லூரி, யாழ்ப்பாணம் ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.