பொதுநலவாய பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்றார் ஸ்ரீமாலி

By Gayathri

09 Dec, 2021 | 05:17 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உஸ்பெகிஸ்தானிலுள்ள டஷ்க்கென்ட் நகரில் நடைபெற்று வரும் உலக  பளுதூக்கல் போட்டித் தொடர் மற்றும் பொதுநலவாய பளுதூக்கல் போட்டியின் நேற்றைய இரண்டாவது தினத்தில் (08) இலங்கையின் ஸ்ரீமாலி சமரக்கோன்  பொதுநலவாய  பளுதூக்கல் போட்டித் தொடரில்  பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஸ்ரீமாலிக்கு உலக பளுதூக்கல் பதக்கம் வெல்ல முடியாமல் போனபோதும்,  பொதுநலவாய  பளுதூக்கல் போட்டித் தொடரில்  இலங்கைக்காக தங்கப் பதக்கம் வென்று கொடுக்க முடிந்தமை பாராட்டத்தக்கது. 

இதில் அவர், ஸ்னெட்ச் முறையில், 58 கிலோ கிராம் எடையும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 78 கிலோகிராம் எடையும் என மொத்தமாக 136 கிலோ கிராம் எடையை தூக்கியிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம், ஸ்ரீமாலி சமரக்கோன் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பேர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் போட்டியிடுவதற்கு நேரடித் தகுதியை பெற்றுக்கொண்டார்.

கொரோன அச்சுறுத்தல் காரணமாக பிற்போட்டு வரப்பட்டு வந்த உலக பளுதூக்கல் போட்டி மற்றும் பொதுநலவாய பளுதூக்கல் போட்டி என்பவற்றை ஒன்றாக நடத்த சர்வதேச பளுதூக்கல் சம்மேளத்தினால்  தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

இதன்படி தற்போது உஸ்பெகிஸ்தானில் இந்த இரண்டு போட்டிகளும் ஒரே தடவையில் நடத்தப்பட்டு வருகின்றது.  இப்போட்டித் தொடர்களானது நேற்று முன்தினம் (7) ஆரம்பமானது.

இந்நிலையில், ஆண்களுக்கான 55 கிலோகிராம் எடைப்பிரிவின் க்ளீன் அண்ட் ஜேர்க்கில் பங்கேற்ற டிலன்த்த குமார மூன்று முயற்சிகளிலும் எடையை உயர்த்த முடியாமல் போனது கவலைக்குரிய விடயமாகும். 

இதையடுத்து ஸ்‍னெட்ச் முறையில், 105 கிலோ கிராம் எடையை தூக்கியிருந்தார். எனினும் அடுத்தடுத்த முயற்சியில்  110 கிலோ கிராம் எடையை தூக்குவதற்கு முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right