பாதாள உலகக்குழுக்களுடன் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு நெருங்கிய நட்பு - சபையில் வெளிப்படுத்தினார் சரத்

By T. Saranya

09 Dec, 2021 | 05:16 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஒரு தரப்பு பாதாளக்குழுக்களுடன் நெருக்கமான நட்பை அமைச்சர் சரத் வீரசேகர பேணுவதுடன், அவர்களின் பாதுகாப்பிற்காக இன்னொரு குழுவை கொலைசெய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

கொலைகளை நியாயப்படுத்தி அவர் கூறிய கதைகளுக்கு ஒருநாள் அவர் பதில் கூறியே ஆகவேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற நீதி அமைச்சு,இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு,தொழில்நுட்ப அமைச்சு,அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு,கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, டிஜிட்டல் தொழில்நுட்பம்  மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

கைது செய்யப்படும் நபர்கள் கொலைசெய்யப்படுவது குறித்து அண்மையில் நான் சபையில் கருத்துக்களை முன்வைத்தேன்.

அப்போது அமைச்சர் சரத் வீரசேகர டிங்கரிங் லசந்த என்ற நபர் குறித்து நான் கருத்து கூறியதாக தெரிவித்தார். ஆனால் நான் அவ்வாறு யார் பேரைக்கூறியும் பேசவில்லை. 

ஆனால் சரத் வீரசேகர எப்போதும் கொள்ளைக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் நபர்.

இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருள் கொண்டுவரும் நபருடன் அமைச்சர் சரத் வீரசேகர நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் என்னிடம் உள்ளது, அதில் தற்போது பிரபல்யமாக பேசப்படும் தேரர் ஒருவரும் உள்ளார். 

ஆகவே சரத் வீரசேகர ஒரு தரப்பு பாதாளக்குழுக்களுடன் நெருக்கமான நட்பை பேணுவதுடன் அவர்களின் பாதுகாப்பிற்காக இன்னொரு குழுவை கொலைசெய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

அதிகாரத்தை பயன்படுத்து கொலைகளை செய்துகொண்டுள்ளவர்களை எம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. கரன்னகொடவும் இதையே செய்தார். அவர்களும் இன்று  பிரபல்யமடைய நினைகின்றனர். 

சரத் வீரசேகரவின் வரலாறுகள் என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அரசாங்கத்தில் இருந்து கீழ்த்தரமான வேலைகளை செய்துகொண்டு இவர்கள் என்னை விமர்சிக்கின்றனர்.

இவர் கடமையாற்றிய காலத்தில் எனது அலுவலகத்தில் என் முன்னால் மண்டியிட்டு சலுகைகளை பெற்றுக்கொண்டவரே சரத் வீரசேகர. அதுமட்டுமல்ல, அமைச்சர் பல பொய்களை கூறிக்கொண்டுள்ளார். 

கொள்ளைக்காரர்களை பொலிஸ் வைத்தியசாலைக்கு வரவழைத்து அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தடுப்பூசி வழங்கினார். இப்போது தங்கம் தேடுவதாக செயற்படுகின்றார். காணி அபகரிப்பில் ஈடுபட்டும்கொண்டுள்ளார். கொலைகளை நியாயப்படுத்தி அவர் கூறிய கதைகளுக்கு அவர் ஒருநாள் பதில் கூறியே ஆகவேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல் போன வாழைச்சேனை மீனவர்கள் 64...

2022-11-28 11:28:14
news-image

என்னால் இலங்கை போன்ற ஒரு நிலையை...

2022-11-28 11:27:32
news-image

வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல்...

2022-11-28 11:08:41
news-image

அடுத்த வருடம் முதல் ஆரம்ப வகுப்பிலிருந்தே...

2022-11-28 10:59:58
news-image

போதைப்பொருள் கடத்தலிற்கு சிங்கப்பூர் பாணியில் மரணதண்டனை...

2022-11-28 11:05:01
news-image

மனைவியை தாக்கிய நபர் வைத்தியசாலைக்குச் சென்றபோது...

2022-11-28 11:14:36
news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

'தாய்நிலம்' எனும் ஆவணப்படத்தை பாருங்கள் -...

2022-11-28 11:10:10
news-image

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு...

2022-11-28 10:57:53
news-image

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய...

2022-11-28 10:44:24
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43