(லியோ நிரோஷ தர்ஷன்)

பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மூழ்கின்ற கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கப்படவில்லை என்றும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை விரைவில் முழுமையடைய செய்யுமாறும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

No photo description available.

கட்சி உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் , 

ஏடுகளில் எழுதப்பட்ட  கணக்கு விபரங்களில் எவ்விதமான பலனும் இல்லை. மக்களிடம் பணம் இல்லை என்பதே யதார்த்தமான உண்மை. மக்கள் மயப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய விரைவாக செல்ல வேண்டும். நல்லாட்சி காலத்தில் அதிகமான கடன் தொகை செலுத்தியமையால் அபிவிருத்தி வேகம் மட்டுப்பட்டது. ஆனால் மூன்று வேளையும் உணவை மக்கள் தடையின்றி பெற்றுக்கொள்ள கூடிய பொருளாதார சூழலை உருவாக்கினோம்.

பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. மூழ்கும் கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கப்பட வில்லை. எனவே கட்சியை மறுசீரமைக்கும் பணிகளை விரைவில் முழுமையடைய செய்யுங்கள்.