இங்கிலாந்துக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி

By Gayathri

09 Dec, 2021 | 04:10 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்று வருகின்ற 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரை ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் இலங்கை அணி 3க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நேற்றைய தினம் கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெற்ற 4 ஆவது போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 126 ஓட்டங்களால் அபார வெற்றியை ஈட்டியது. 

No description available.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 243 ஓட்டங்களை குவித்தது. 

துடுப்பாட்டத்தில் பவன் பத்திராஜ (60), ரவீன் டி சில்வா (59) அரைச்சதங்களை அடித்தனர்.  இவர்களைத் தவிர ஆரம்ப வீரராக களமிறங்கிய ஷெவொன் டேனியல் 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்;. 

பந்துவீச்சில் பெஞ்சமின் கிளிப் 3 விக்கெட்டுக்களையும், நதன் போர்ன்வல் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

244 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். 

No description available.

துடுப்பாட்டத்தில் ஜோர்ஜ் தோமஸ் 40 ஓட்டங்களையும், ஹெரி க்ரோஷோ 31 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் அரைச்சதம் அடித்து அசத்தியிருந்த ரவீன் டி சில்வா இலங்கை அணி சார்பாக பந்துவீச்சிலும் அசத்தி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். 

இவரைத் தவிர மதீஷ பத்திரண 2 விக்கெட்டுக்களையும் ஷெவொன் டேனியல், வனூஜ சஹான், சதீஷ ராஜபக்ஷ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

 

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் நிறைவில் இலங்கை அணி 3க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையுடன் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right