(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை சபையில் விமர்சித்த எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகாவுடன் அமைச்சர் விமல் வீரவன்ச வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மைத்திரிபால சிறிசேனவிற்கு முன்னாள் ஜனாதிபதி என்ற மரியாதையை வழங்கி உரையாற்றுங்கள் என வலியுறுத்தினார்.

புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்ய விரும்பினால் தெற்கிலும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்போம் ...

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9), இடம்பெற்ற நீதி அமைச்சு,இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு,தொழில்நுட்ப அமைச்சு,அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு,கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, டிஜிட்டல் தொழில்நுட்பம்  மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா,

நான் எவ்வாறானவன் என்றது தெரிந்த காரணத்தினால் தான் நல்லாட்சியில் எனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு மறுக்கப்பட்டது என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதனை எனக்கு வழங்காத நபரும் இந்த சபையில் உள்ளார். ஆனால் இந்த கதை உண்மையே. நல்லாட்சி அரசாங்கத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களின் சிலர் மைத்திரிபால சிறிசேனவிடம் சென்று எனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சை கொடுக்க வேண்டும் என கோரிக்கையொன்று முன்வைத்தனர்" என உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் ஒழுங்குப்பிரச்சினைகளை எழுப்பிய அமைச்சர் விமல் வீரவன்ச சரத் பொன்சேகா எம்.பியுடன் முரண்பட ஆரம்பித்தார்.  

இதன்போது அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகையில்:- மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டில் முன்னாள் ஜனாதிபதியாவார். அவரை அவமதிக்கும் விதமாக வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம், அவர் ஒரு மக்கள் பிரதிநிதி , அவருக்கு மரியாதை கொடுத்து உரையாற்றுங்கள் என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த சரத் பொன்சேகா எம்.பி:- அவர் இப்போது ஜனாதிபதி இல்லையே, நான் தவறாக பேசியிருந்தால் அந்த வார்த்தைகளை நீக்குங்கள் எங்கு கூறியதுடன், எனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சை கொடுத்திருந்தால் முதலில் நான் அவரைத்தான் கைது செய்திருப்பேன் என மைத்திரிபால சிறிசேன கூறினாராம் என சபையில் தெரிவித்தார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் சாந்த பண்டார :- உங்களுக்கு 'பீல்ட் மார்ஷல்' பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வழங்கினார் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த சரத் பொன்சேகா எம்.பி :- உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன், இந்த பதவியை அவர் தனது வீட்டில் இருந்து எடுத்து வந்து என்னிடம் கொடுக்கவில்லை. எமக்கு கிடைக்க வேண்டியதும், அதற்கு தகுதியானவர் என்பதற்காகவும் எனக்கு இந்த பதவிகள் கிடைத்தன. மாறாக பொலன்னறுவையில் இருந்து பதவிகளை அவர் எமக்கு எடுத்துக்கொடுக்கவில்லை என்றார்.