கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 4

09 Dec, 2021 | 03:12 PM
image

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நாளை (10) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (09) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

தனது கட்சிக்காரர் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறும், கிண்ணியா நகர சபைத் தலைவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆயினும் இது தொடர்பான வழக்கை நாளை வரை ஒத்திவைத்த நீதவான் சந்தேகநபரின் விளக்கமறியலை நாளை வரை நீடிப்பதாக உத்தரவிட்டார்.

குறித்த அனர்த்தம் தொடர்பில் படகின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவர் ஆகிய மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்கும் உத்தரவு நேற்று(8) வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31