பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியவில் வர்த்தகர் மொஹமட் சுலைமான், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு காரில் சென்று வீட்டு வாசலில் இறங்க முற்பட்டவேளை அவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருந்தார். 

அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி மாலை மாவனெல்ல ஹெம்மாதகம வீதியிலுள்ள யுகுலகல பிரதேசத்திலிருந்து இனம்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த சடலம் பம்பலப்பிட்டி பிரதேசத்தில்  ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கடத்தப்பட்ட கோடிஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் சகீப் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.