புதிய டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பட்டப்படிப்பு : களனி பல்கலைக்கழகம் -  ஒகில்வி டிஜிட்டல் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

09 Dec, 2021 | 10:14 AM
image

களனி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பட்டப்படிப்பை முன்னெடுப்பதற்கு தனது தொழிற்துறை அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் முன்னணி டிஜிட்டல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமான ஒகில்வி டிஜிட்டல் கைச்சாத்திட்டுள்ளது.  

அரச பல்கலைக்கழகத்தினால் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

( களனி பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் நிலந்தி டி சில்வா மற்றும் பீனிக்ஸ் ஒகில்வி குழுமத்தின் தவிசாளர் ஏர்வின் வீரக்கொடி ஆகியோர் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பட்டப்படிப்பை தொடர்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை பரிமாறிக் கொள்கின்றனர். )

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையுடன், களனி பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பிரிவுடன் ஒகில்வி டிஜிட்டல் கைகோர்த்து, இந்தக் கற்கையை தொடரும் மாணவர்களுக்கு ஆழமான டிஜிட்டல் கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் நிலந்தி டி சில்வா மற்றும் பீனிக்ஸ் ஒகில்வி குழுமத்தின் தவிசாளர் ஏர்வின் வீரக்கொடி ஆகியோருக்கிடையே இந்த புதிய பட்டப்படிப்புக்கான புரிந்துணர்வு கைச்சாத்திடப்பட்டது.

களனி பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் நிலந்தி டி சில்வா இந்த கைகோர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், 

“கல்வித் திட்டத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் எமது சொந்த வழிமுறைகளில் மாத்திரம் எம்மால் தங்கியிருக்க முடியாது. எமது பட்டதாரிகள் பணியாற்ற எதிர்பார்க்கும் பிரிவுகளுக்கு நாம் சென்றடைய வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு பங்களிப்பு வழங்குவதற்கு போதியளவு அறிவும் திறனும் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

( களனி பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் நிலந்தி டி சில்வா உரையாற்றுகின்றார். )

அதனூடாக, அவர்கள் பணியாற்றும் துறைகளில் அவர்களால் உற்பத்தித் திறன் வாய்ந்தவர்களாக திகழக்கூடியதாக இருக்கும். பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவப் பிரிவினால் விடயங்களை சிறப்பாக மேற்கொள்வதற்கு காண்பிக்கப்படும் ஈடுபாடு மற்றும் ஆர்வம் தொடர்பில் நான் அதிகளவு மகிழ்ச்சியடைகின்றேன். 

இந்தப் பங்காண்மை எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளை வழங்கும் என நம்புகின்றேன். சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனம் எனும் வகையில், தொடர்பாடல்களில் எந்த வகையான தகவல்கள் வழங்கப்படுகின்றன என்பது மற்றும் அதற்கான நன்னெறிகளை பின்பற்றுவது தொடர்பில் ஒகில்வி தெளிவான வழிமுறையை கொண்டிருக்கும் என நம்புகிறேன்.

மேலும், எமது மாணவர்களுக்கும் அவற்றை பின்தொடர்ந்து பயன்பெறக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

( பீனிக்ஸ் ஒகில்வி குழுமத்தின் தவிசாளர் ஏர்வின் வீரக்கொடி உரையாற்றுகின்றார். )

பீனிக்ஸ் ஒகில்வி குழுமத்தின் தவிசாளர் ஏர்வின் வீரக்கொடி கருத்துத் தெரிவிக்கையில்,

“களனி பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பட்டப்படிப்புக் கற்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு எமது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். 

முன்னணி டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனம் எனும் வகையில், டிஜிட்டல் கல்வியை பயில்வதற்கு பங்களிப்பு வழங்க நாம் முன்வந்துள்ள இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது எம்மை வழிநடத்துகின்றது. எம் முன்னால் புதிய உலகு தோற்றம் பெரும் நிலையில், நாம் வாழும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நாம் விடயங்களை மேற்கொள்ளும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். 

தொழில்நுட்பத்தின் முன்னேற்றமாக டிஜிட்டல் புரட்சி அமைந்துள்ளது. தனியார் துறையின் பங்கேற்புடன் அறிவுசார்ந்த பொருளாதாரமாக திகழச் செய்வதற்கு இந்தத் தொழில்நுட்பம் இலங்கைக்கு உதவியாக அமைந்திருக்கும். 

வங்கியியல் துறை முக்கிய பங்களிப்பை வழங்கும் நிலையில், இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதை எம்மால் காணக்கூடியதாகவுள்ளது. 

இராணுவமொன்றின் ஊடுருவலை தாங்கிக் கொள்ளலாம் என்ற போதிலும், சிந்தனைகளின் ஊடுருவலை தாங்கிக்கொள்ள முடியாது எனும் பொதுவான கூற்று ஒன்றும் காணப்படுகின்றது.  

அதனடிப்படையில் இலங்கையில் இந்தப் பட்டப்படிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் என்பதுடன், இந்த நாட்டின் அபிவிருத்தியில் இது முக்கிய பங்காற்றும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. நாரத பெர்னான்டோ மற்றும் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ திணைக்களத்தின் தலைமை அதிகாரி பேராசிரியர். ரவி திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் பழைய பல்கலைக்கழகங்களில் ஒன்றான களனி பல்கலைக்கழகம், நிலைபேறான அபிவிருத்திக்கு அறிவு உருவாக்கம் மற்றும் பகிர்ந்தளிப்பு என்பதில் சிறப்பு மையமாக திகழ்வதை நோக்காகக் கொண்டுள்ளது.

புத்தாக்கம் மற்றும் ஆக்கத்திறனினூடாக புலமைச்சொத்தான குடிமக்களை உருவாக்கி, அதனூடாக தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குவது பல்கலைக்கழகத்தின் தன்னேற்புத்திட்டமாக அமைந்துள்ளது.

புதிய கற்கையின் மூலோபாய பங்குதாரர் எனும் வகையில், ஒகில்வி டிஜிட்டல் இதே நோக்கத்தைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஆதரவளித்து வலிமைப்படுத்துவதில் பங்களிப்பு வழங்கும் நோக்கில் இயங்குகின்றது.

புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ், பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டப்படிப்புக்கான பாடவிதானத்தை உருவாக்கும் என்பதுடன், கற்கையின் பொருளடக்கம் மற்றும் மதிப்பாய்வு முறைகளுக்கான ஆலோசகராக திகழ்ந்து, சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவ சந்தைப்படுத்தல்பட்டதாரி கற்கையின் சான்றளிப்பு (CPMG) குழுவின் அங்கத்தவராக அமைந்திருக்கும்.

நிறுவனத்தினால் பட்டப்படிப்புக்காக விருந்தினர் விரிவுரைகளை வழங்குவதுடன், பட்டதாரி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் என்பதுடன், பல்கலைக்கழகத்துடன் அறிவு பகிர்வு அமர்வுகளையும் முன்னெடுக்கப்படும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58