மழைக்கு பின்னர் அவிஷ்க - திசரவின் சிக்ஸர் மழை ; ஜப்னா கிங்ஸுக்கு இரண்டாவது வெற்றி

By Vishnu

10 Dec, 2021 | 08:24 AM
image

கண்டி வோரிஸர்ஸுக்கு எதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் திசர பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடியான சிக்ஸர்களின் விளைாவினால் ஜப்னா கிங்ஸ் 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் மற்றும் அஞ்சலோ பெரேரா தலைமையிலான கண்டி வோரிஸர் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி வோரிஸர், முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை எதிர் அணிக்கு வழங்கியது.

அதற்கிணங்க ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும்போது மழை குறுக்கிட்டதனால் போட்டி ஆரம்பத்திலேயே இடை நிறுத்தப்பட்டது.

பின்னர் மைதான ஊழியர்களின் கடின உழைப்பின் பலனாக, ஒரு அணிக்கு 14 ஓவர்கள் வீதம் 106 நிமிடங்கள் கழித்து ஆட்டம் தொடங்கியது. 

நிலைமையினை உணர்ந்து அதிரடியான ஆட்டம் காட்ட ஆரம்பித்த ஜப்னா கிங்ஸ் 14 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை குவித்தது.

வலது மற்றும் இடது கை துடுப்பாட்ட வீரர்களான இவர்களின் மூன்றாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் அணிக்காக 33 பந்துகளில் 105 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தது.

Image

அவிஷ்க பெர்னாண்டோ இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களையும், திசர பெரேரா 6 சிக்ஸர்களையும் மொத்தமாக விளாசித் தள்ளினார்கள்.

ஜப்பான கிங்ஸ் குவித்த 181 ஓட்டங்களில் 128 ஓட்டங்கள் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மூலம் கிடைக்கப் பெற்றவை ஆகும்.

முழு இன்னிங்ஸிலும் 16 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் பெறப்பட்டன. அதில் அவிஷ்க ஏழு சிக்ஸர்களையும், திசர பெரேரா ஆறு சிக்ஸர்களையும் விளாசினர்.

அவிஷ்க 23 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அதில் ஒரு பவுண்டரியும் உள்ளடங்கவில்லை. அதேநேரம் 21 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்த திசர பெரேரா 2 பவுண்டரிகளை பெற்றார்.

182 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய கண்டி வோரியர்ஸ் அணியால் தலா 14 ஓவர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட இப் போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

சரித் அசலங்கா மற்றும் கானர் லூயிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30 பந்துகளில் 64 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தது.

உலகின் நம்பவர் 1 டி-20 பந்து வீச்சாளரான ஹசரங்கவை பந்து வீச்சுக்களை கடுமையாக தாக்கிய அசலங்க மொத்தமாக 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய ரோவ்மன் போல், கானர் லூயிஸுடன் இணைந்து அதிரடி காட்டினார்.

கண்டி வோரியர்ஸ் அணிக்காக ரோவ்மன் போல் 19 பந்துகளில் 61 ஓட்டங்களை குவித்தார். 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை அடித்த ரோவ்மேன் இந்த சீசனின் வேகமான மற்றும் மிகவும் திறமையான லங்கா பிரீமியர் லீக் போட்டியில் தனது அரை சதத்தை கடந்தார். 

எனினும் அவர் 11.2 ஆவது ஓவரில் சுரங்க லக்மானில் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

இறுதியாக கண்டி வோர்யர்ஸ் அணியினரால் மட்டுப்படுத்தப்பட்ட 14 ஓவர்கள் நிறைவில் 166 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இந்த வெற்றி நான்கு போட்டிளை எதிர்கொண்ட ஜப்னா கிங்ஸுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். அதேநேரம் கண்டி வோரியர்ஸுக்கான மூன்றாவது தோல்வியாகும். 

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right