காலி மாவட்ட கிரிக்கட் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பிரபல வர்த்தகருமான பிரேமசிறி ஹெலம்பகே கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட வேளையில் டி 56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.