இன முரண்பாடுகளை தீர்ப்பதன் மூலமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் - சாணக்கியன்

By T Yuwaraj

08 Dec, 2021 | 09:33 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)  

அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது விரட்டியடிக்கவோ நாம் முயற்சிக்கவில்லை. நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே விரும்புகின்றோம்.

அதற்கான சந்தர்ப்பத்தை எமக்கும் வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார். 

'துறைமுகங்கள், விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஏன் பலாலி விமான நிலையம் ...

நாட்டின் இன முரண்பாடுகளை தீர்ப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8 ) இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சு மற்றும் பிரம்புகள்,பித்தளை மட்பாண்டங்கள் ,மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றை கூறினார், 

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு கிழக்கில் தொழிற்சாலைகளை புதிதாக நிர்மாணிக்கவும், இருக்கின்ற தொழிற்சாலைகளை புனரமைக்கவும் தொடர்பாடல் ஒன்றினை உருவாக்க வேண்டும்.

தலைமன்னார் ராமேஸ்வரம் படகு சேவை, வடக்கு கிழக்கின் விமான நிலையங்களை புனரமைத்தல், புகையிரத சேவைகளை முன்னெடுக்க வேண்டும். துறைமுகங்கள், விமான நிலையங்களுடன் விரைவாக தொடர்புபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் நாம் வெளிநாடுகளில் சென்று இலங்கைக்கு முதலீடுகளை செய்யுமாறு கூறினோம், ஆனால் அவர்கள் கேற்கும் விடயம் ஒன்றுதான், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் நாட்டில் எப்போதும் குண்டு வெடிக்கலாம் என அச்சுறுத்தும் நிலையில் நாம் எவ்வாறு அங்கு வருவது என கேட்கின்றனர். ஆகவே இந்த நிலைமையில் எதிர்காலத்தில் நாட்டில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமையே ஏற்படும்.

இன்று பாகிஸ்தானில் வேறு இனக்குழு மூலமாக இலங்கை பிரஜை ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டதை போன்று இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில் பல கொலைகள், அழிவுகள் இடம்பெற்றுள்ளன. தமிழர்கள் அடித்தும், எரித்தும் கொல்லப்பட்ட வரலாறுகள், அதற்கான ஆதரங்களுடன் உள்ளன. தமிழர் ஆயுதம் ஏந்த முன்னர் நீண்டகால அரசியல் போரட்டத்தை முன்னெடுத்தனர். அரசாங்கத்துடன் பேசி தீர்க்க முடியாத நிலையிலேயே ஆயுதம் எந்த நேர்ந்தது.

பலவீனமான, கவனயீனம் காரணமாக அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் நாடுகளுக்கு இடையில் பரவுவதாக ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் அதுவே இடம்பெற்றுக்கொண்டுள்ளது. பெளத்த அடிப்படைவாதமே இலங்கையிலும் பரவிக்கொண்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தின் மூலமாகவே கீழ்த்தரமான பதிவுகள் பதியப்படும் நிலைமை நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, நாட்டின் இன முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாது நாட்டை கட்டியெழுப்ப முடியும், அதற்கு முதலில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை கைவிட வேண்டும். இன முரண்பாடுகளை தீர்க்க வேண்டும்.

இன முரண்பாடுகளை தீர்க்க எமக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நாம் அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது வீட்டுக்கு அனுப்பவோ முயற்சிக்கவில்லை. நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே விரும்புகின்றோம். அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ள...

2022-11-30 16:31:06
news-image

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி :...

2022-11-30 17:31:17
news-image

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக்...

2022-11-30 16:55:29
news-image

யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3...

2022-11-30 17:21:40
news-image

தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழர்கள் தயாரில்லை...

2022-11-30 16:25:40
news-image

யூடியூப்பை பார்த்து இராணுவத்தினரின் ஸ்னைப்பர் துப்பாக்கி...

2022-11-30 16:28:07
news-image

மக்களுக்காக எந்த மட்டத்திலும் அரசியல், தொழிற்சங்க...

2022-11-30 16:17:16
news-image

மட்டக்களப்பில் சுற்றுலாத் துறைக்காக காணிகளை அடையாளங்காண...

2022-11-30 16:18:11
news-image

மட்டக்களப்பில் அரச காணிகளை வனவள துறையிடமிருந்து...

2022-11-30 16:04:28
news-image

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2022-11-30 16:11:22
news-image

திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன...

2022-11-30 16:03:58
news-image

15 வயதான தனது சொந்த மகளை...

2022-11-30 15:44:21