இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அந் நாட்டு விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

India's top military officer, CDS Gen Bipin Rawat, dies in helicopter crash in Tamil Nadu

தமிழகத்தின் குன்னூரில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார். 

குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியபோது அதில் 14 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் அருகே சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர் கல்லூரிக்கு பிபின் ராவத் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. 

Bipin Rawat: India's top general in helicopter crash - BBC News

அவரைத் தவிர, அவரது மனைவி மதுலிகா ராவத், பாதுகாப்பு உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள் மற்றும் இந்திய விமானப் படை விமானி ஆகியோர் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானபோது அதில் இருந்ததாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமாப்படை உறுதிபடுத்தியுள்ளது.