மரக்கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் வவுனியாவில் கைது

Published By: Digital Desk 4

08 Dec, 2021 | 08:38 PM
image

சட்டவிரோதமான முறையில் காட்டினை அழித்து முதிரை மரக்குற்றிகளை கடத்திய ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பறயனாலங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பறயனாலங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீலியாமோட்டை பகுதியில் முதிரை மரக்குற்றிகள் வெட்டப்படுவதாக கிடைக்கபெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதியில் இன்று (08.12) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். 

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளதுடன் சுமார் இரண்டு ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதியில் இருந்த முதிரை மரங்கள் மற்றும் பெறுமதியான மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் அரசுக்கு சொந்தமான அந்த காணியினை அபகரிக்கும் நோக்குடன்  கஜூ மரங்களையும் அங்கு நாட்டியுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக பறயனாலங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக தெரிவித்த  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவ்வாறான நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-12-11 12:11:38
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட...

2024-12-11 11:56:43
news-image

புத்தளத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு...

2024-12-11 11:42:37
news-image

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மூதாட்டி...

2024-12-11 11:57:18
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2024-12-11 11:10:42
news-image

தீயில் முற்றாக எரிந்து நாசமான வீடு!...

2024-12-11 11:15:14
news-image

அனுரவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான...

2024-12-11 11:04:21
news-image

கொழும்பு துறைமுக திட்டத்திற்கு அமெரிக்க நிதியை...

2024-12-11 10:38:06
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2024-12-11 10:33:39
news-image

”பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை...

2024-12-11 10:44:56
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்தவர் சிகிச்சை...

2024-12-11 10:19:06
news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம்...

2024-12-11 09:55:45