(இராஜதரை ஹஷான்)

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இன்றைய தினம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த தொழிற்சங்கத்தினர் இன்று பகல் இலங்கை மின்சார சபை முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பேரணி காரணமாக கோட்டை தனியார் பஸ் நிலையம் தொடக்கம், கோட்டை புகையிரத நிலையம் வரை கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஒன்றினைந்த தொழிற்சங்கததினர் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்தில் மஹஜர் ஒன்றையும் கையளித்தார்கள்.