சார்க் பிராந்தியத்தில் முதலாவது இடத்தை பெறும்  சந்தர்ப்பத்தை கடந்த அரசாங்கத்தினால் இழந்தோம் 

Published By: Ponmalar

28 Sep, 2016 | 09:08 PM
image

(ரொபட் அன்டனி) 

அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக  தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றினோம்.  சார்க்  வலையத்தில்      தகவல் அறியும் உரிமை  சட்டமூலத்திற்குள்  செல்கின்ற இறுதிநாடாக இலங்கை   பதிவாகிறது. 2001 ஆம் ஆண்டே இதனைக் கொண்டுவந்திருந்தால்   சார்க் பிராந்தியத்தில் நாம் முதலாவது நாடாக இருந்திருப்போம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய  தெரிவித்தார்.  

சர்வதேச தகவல் அறியும்  தினத்தை முன்னிட்டு  இன்று கொழும்பில் ஆரம்பமான  தகவலறியும் உரிமை தொடர்பான சர்வதேச மாநாட்டில்   கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  அவர்   மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்களினால் வழங்கப்பட்ட ஆணைக்கு  அமைவாக  தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.  இதனையிட்டு நாம் மகிழ்ச்சி அடைந்தாலும், ஒரு விடயத்தில் கவலையடைகிறோம்.  அதாவது  சார்க்  வலையத்தில்  இந்த   தகவல் அறியும் உரிமை  சட்டமூலத்திற்குள்  செல்கின்ற இறுதிநாடாக இலங்கை   பதிவாகிறது. 

2001 ஆம் ஆண்டே இதனைக் கொண்டுவந்திருந்தால்   சார்க் பிராந்தியத்தில் நாம் முதலாவது நாடாக இருந்திருப்போம். இந்தியாவில் இந்த உரிமையை  மக்களே கோரி போராட்டம் நடத்தினர். ஆனால் இலங்கையில்  இந்த கோரிக்கையை எதிர்க்கட்சியே முன்வைத்தது. 

நாங்கள் சுயாதீன ஆணைக்குழுக்களையும், தகவல் அறியும் உரிமையையும் நாங்கள் கோரிய போது முன்னைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவே இவ்வாறு  செய்கின்றோம் என்று கூறினர்.  இறுதியில் எமது ஜனாதிபதியின்  கீழ் இதனை செய்திருக்கின்றோம். 

இந்த விடயத்தில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.  ஊடகங்களினால் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கவும் முடியும்  அழிக்கவும் முடியும்.  மேலும் ஸ்கொட்லாந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளில்  இந்த சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்த ஆறு வருடங்கள் சென்றது.  

ஆனால் எமது நாட்டில்   இதனை விரைவாக செய்ய முடியும் என நம்புகிறோம். இவ்வாறான   சட்டமூலங்களை கொண்டுவருவது அரசாங்கத்திற்கு பாதகமாகவே அமையும், ஆனால் நல்லாட்சிக்கு இது அவசியம் என்பதால் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த நாங்கள் இதனை செய்திருக்கின்றோம். இதில்  மக்கள் அக்கறை காட்டவேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22