logo

கோண்டாவில் றோ.க.த.க பாடசாலைக்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் உதவி திட்டம்

Published By: Gayathri

08 Dec, 2021 | 04:01 PM
image

யாழ்/கோண்டாவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ITR)பணிப்பாளருமான சரவணையூர் விசு செல்வராசாவின் நெறிப்படுத்தலில் அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளால்  பாடசாலைக்கு 81 ஆயிரம் ரூபா செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. 

42 மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் நீ்ண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சனைக்கு அறக்கட்டளையால்  தீர்வு பெற்று கொடுக்கப்பட்டது.

அத்துடன் அறக்கட்டளையால் மாணவர்களுக்கு மதிய போசனமும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் க.நித்தியானந்தன்  தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான, செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், தலைவர் நா.தனேந்திரன், இணைப்பாளர் யோசேப், அறக்கட்டளையின் கல்விப்பிரிவு பொறுப்பாளர் அதிபர், க.சசிகரன், அறக்கட்டளையின் பொருளாளர் கீர்த்தனா, உப செயலாளர் இ.சற்குருநாதன், உப தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஆலோசகர் இ.மயில்வாகனம், அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினர்களான வினோத் மற்றும் விது ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு குடிநீர்த் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததோடு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் மதிய போசனத்தையும் வழங்கி வைத்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மதுஷிகனுக்கு...

2023-06-07 21:56:18
news-image

‘பூஞ்செண்டு’ கவிதை நூல் வெளியீட்டு விழா

2023-06-07 21:01:00
news-image

நாவற்குழியில் 'பசுமை அறிவொளி' நிகழ்ச்சி

2023-06-07 14:47:49
news-image

இலங்கையின் முதலாவது மொபைல் ஊடகவியல் விழா

2023-06-06 16:20:33
news-image

பல்லின மாணவர்களும் கலந்துகொண்ட பாகிஸ்தான் புலமைப்பரிசில்...

2023-06-06 17:06:31
news-image

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல்...

2023-06-05 20:03:46
news-image

சிலம்பம் கலையின் தொழில்நுட்ப பணிப்பாளர் நியமனம்

2023-06-05 17:40:20
news-image

ஹேக்கித்த ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான...

2023-06-05 14:18:27
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்ற வருடாந்த...

2023-06-05 15:12:17
news-image

கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலய...

2023-06-05 12:24:31
news-image

மொராவெவ பகுதியில் பொசன் அன்னதான நிகழ்வு 

2023-06-03 14:13:44
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி - 2023'  

2023-06-03 12:41:01