ஸ்கரப் டைபஸ் என்ற புதிய வகை தொற்று பாதிப்புக்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 4

08 Dec, 2021 | 03:58 PM
image

அண்மைக்காலமாக இந்தியா உள்ளிட்ட  தென்னாசிய நாடுகளில் ஸ்கரப் டைபஸ் என்ற புதிய வகை தொற்று பாதிப்பு பரவி வருகிறது. இது தொடர்பாக மருத்துவர்கள் தற்போது விளக்கமளித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பாதிப்பு பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் என்ற பெயரில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் வட பகுதிகளிலும், தெற்காசிய நாடுகள் சிலவற்றிலும் மக்கள் புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினர், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்றும், Mite-Borne Rickettsiosis எனப்படும் ஸ்கரப் வகை வைரஸ் கிருமியால் இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கண்டறிந்தனர். மேலும் Orientia Tsutsugamushi என்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படக்கூடிய நோய்தான் இந்த ஸ்கரப் டைபஸ் பாதிப்பு என்று விளக்கமளித்தனர்.

இத்தகைய பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் பூச்சிகள், மனிதர்களை கடிப்பதால் இந்த பாதிப்பு மனிதர்களுக்கும் பரவுகிறது. ஸ்கரப் டைபஸ் பாதிப்பு ஏற்பட்டால் மனிதர்களுக்கு தலைவலி, காய்ச்சல், அரிப்பு, உடல் வலி, மூட்டுவலி, நுரையீரல் அழற்சி, சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சை பெறாவிட்டால், மூளைக்காய்ச்சல், இதய செயலிழப்பு, கோமா நிலைக்கு செல்வது போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதற்கு மருந்துகள் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

இதனை தவிர்க்க வேண்டுமென்றால் நுளம்பு மற்றும் பூச்சிகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும். வீடுகள் மற்றும் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04