(சபை நிருபர்கள்)

 3000 அமெரிக்க டொலர்கள் வரை பெறுமதியான மாணிக்கக் கற்களை இணையத்தின் ஊடாக (ஒன்லைன்) ஓடர் செய்து கொள்வனவு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கைத்தொழில் அமைச்சு பற்றிய ஆலோசனைக் குழுவில்  அங்கீகரிக்கப்பட்டது.

இறக்குவானையில் மற்றுமொரு 80 கிலோ நீல மாணிக்க கல் | Virakesari.lk

தற்போது நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை மீதான கட்டுப்பாடுகளால் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இங்கு தெரியவந்தது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் அறவிடப்படும் 0.5 வீத கட்டணத்தை 0.25 வீதமாகக் குறைப்பது இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

1993ஆம் ஆண்டின் 50ஆம் இலக்க, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் கைத்தொழில் அமைச்சரினால் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் அடங்கிய 2165/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இவ்வாறு குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.