தடுப்புக் காவல் உத்தரவு நிறைவுற்றதும் பொடி லெசி தொடர்பில் எடுக்கும் தீர்மானம் என்ன ?

Published By: Vishnu

07 Dec, 2021 | 09:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கைதுசெய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவன் என கருதப்படும் பொடி லெஸியின் (ஜனித் மதுசங்க) தடுப்புக் காவல் உத்தரவு நிறைவுற்றதும் அவர் தொடர்பில் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் வினவி  மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவிப்பதாக சட்ட மா அதிபர் இன்று தெரிவித்தார். 

சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் இதனை நீதிமன்றில் குறிப்பிட்டார்.

தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி, பொடி லெசி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்ச் செய்துள்ள ரிட் மனு இன்று  பரிசீலிக்கப்பட்ட போதே இந்த விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. 

இந்த மனுவானது செவ்வாய்க்கிழமை (7) மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி மொஹம்மட் லபார் தாஹிர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது பொடி லெசி சார்பில் மன்றில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், எதிர்வரும் 15 ஆம் திகதி பொடி லெசியின்  தடுப்புக் காவல் உத்தரவு நிறைவடையும் நிலையில், அவர் சி.ஐ.டி.யிடமிருந்து பேலியகொட விஷேட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும், அவர்களின் பொறுப்பில் இருக்கும் போது அவர் கொலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் விசாரணை அதிகாரிகள் கைதிகளை விசாரணைக்கு வெளியே அழைத்துச்  செல்ல வேண்டும், அங்கு சில விரும்பத்தகாத சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று பராளுமன்றத்தில் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூறியுள்ளார். 

இந்த  கருத்து  எனது சேவை பெறுநரின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய அச்சத்தை தோற்றுவித்துள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், பொடி லெசியின்உயிர்ப் பாதுகாப்பு தொடர்பில்  பொலிஸ் மா அதிபர் கடந்த மே மாதம் மன்றுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறினார்.

இந் நிலையில், தடுப்புக் காவல் உத்தரவு நிறைவுற்றதும் அவர் தொடர்பில் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை எதிர்வரும் 13 ஆம் திகதி மன்றுக்கு அறிவிப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கூறினார்.

இதனையடுத்து நீதிமன்றம் மனு மீதான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 13 ஆம்  திகதிக்கு ஒத்தி வைத்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58