பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

By Vishnu

07 Dec, 2021 | 07:35 PM
image

பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (07) பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

May be an image of 4 people and people standing

பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை, சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்டன் பெர்னாந்து உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தற்பொழுது பாதுகாப்புத் தரப்பினரால் கவனம் செலுத்தப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் யோசனைகள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உட்பட பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

May be an image of 2 people, people standing, people sitting and indoor

முக்கிய செய்திகள்

icon-left
icon-right