மதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரியந்தவின் கொலை துரதிர்ஷடவசமானது - கர்தினால்

Published By: Digital Desk 4

07 Dec, 2021 | 07:22 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அரசியல் செய்வதற்கு மதத்தை தவறாக கையாளுகின்றனர். அரசியல் மற்றும் மதம் என்பன இரண்டாகும். அவற்றை வெவ்வேறாக வைத்துக்கொள்வது சகல நாடுகளுக்கும் சிறப்பான  விடயமாக இருக்கும்.

மதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளமையானது துரதிர்ஷடமானதாகும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பாகிஸ்தானில் அடித்து கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இலங்கையரான பிரியன்த்த குமாரவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான கனேமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை (7) காலை சென்றிருந்ததார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"மதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளமையானது துரதிர்ஷடமானதாகும்.  மதம் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் செயன்முறையாகும்.  நாம் மதத்தை  முறையாக பின்பற்றுவதானால், இன்னுமொருவருக்கு எதிராக கைதூக்க முடியாது. அதுதான் தர்மமாகும்.

உண்மையிலேயே இது துரதிர்ஷ்டமான சம்பவமாகும். எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நிற்கிறோம். அரசியல் செய்வதற்கு மதத்தை தவறாக கையாளுகின்றனர். அரசியல் மற்றும் மதம் என்பன இரண்டாகும். அவற்றை வெவ்வேறாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனை இரண்டாக வைத்துக்கொள்வது சகல நாடுகளுக்கும் சிறப்பான  விடயமாக இருக்கும்.

ஆகவே, இதுபோன்ற விடயங்கள் தொடர்ந்தும் ஏற்படாமல் இருப்பதற்க பிரார்த்திக்கின்றேன். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள் போல் வாழும் உலகமொன்றை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

மேலும், மேற்படி தாக்குதல் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி, அதன் பின்னணியில் உள்ளது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அத்துடன், இந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு அந்நாட்டு அரசாங்கம் உதவும் என எதிர்பார்க்கிறேன்"   என்றார்.

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13
news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை -...

2025-03-21 23:48:50
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59