அரசாங்கம் ஆட்சிக்குவந்து 20 மாதங்கள் கடந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வில்லை. அதனால்தான் அவர்கள் வீதிக்கிறங்கி போராடவேண்டிய நிலை ஏற்பட்டது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.