இலங்கையின் இளம்பந்து வீச்சாளரான துஸ்மந்த சமீர தனது அதிரடி பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியை அதிரவைத்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாளாகிய இன்று 12.4 ஓவர்கள் பந்து வீசி 47 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை எடுத்தார்.

இலங்கை தனது முதலாவது இன்னிங்ஸில் 292 ஓட்டங்களை பெற்றது. தனது முதலாவது இனிங்ஸை தொடர்ந்து நியூஸிலாந்து அணி 232 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்களை இழந்து 60 ஓட்டங்கள் பின்னடைவில்தடுமாற்றத்தில் உள்ளது. 

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டாவதும் டெஸ்ட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.