ஈராக்கின் தெற்கு நகரமான பஸ்ராவின் மையப்பகுதியில் திங்கள்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாக ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு வானத்தில் கரும் புகையை அனுப்பியது.
இது தொடர்பில் பஸ்ராவின் ஆளுநர் ஆசாத் அல்-இதானி, மோட்டார் சைக்கிள் ஒன்று வெடித்து சிதறியதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
எனினும் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு பொருத்தப்பட்டதா அல்லது தற்கொலைக் குண்டுத் தாக்குதலா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
வெடிவிபத்தில் அருகில் இருந்த இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் ஆளுநர் கூறினார்.
இதனிடையே மோட்டார் சைக்கிளுக்கு அருகில் இருந்த இரண்டு கார்களில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாக நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று ஈராக்கின் பாதுகாப்பு ஊடகப் பிரிவு, நாட்டின் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்த ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தடயவியல் குழுக்கள் இருப்பதாகவும், விசாரணை முடிந்ததும் வெடிப்பின் தன்மை குறித்து மேலும் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM