திரு திருமதி சுவீந்திரன் அவர்களின் புதல்வி சுவஸ்திகா சுவீந்திரன் மற்றும் திரு திருமதி அசோகன் அவர்களின் புதல்வி துர்கா அசோகன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கலாசூரி, ஆச்சார்ய கலா சாகர ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்கள் நெறியாள்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் (75 லோரன்ஸ் வீதி, கொழும்பு 04) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு திரு சஞ்சய் ராஜரட்னம் (சட்டமாஅதிபர்) பிரதம விருந்தினராகவும் திருமதி ஈஷா ஸ்பெல்டவின் (அதிபர் - கொழும்பு லேடீஸ் கல்லூரி) மற்றும் திரு அன்டனி செல்லையா (உப அதிபர் - தெஹிவளை கேட்வேய் கல்லூரி ) சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். 

அணிசேர் கலைஞர்களாக,  குரலிசை - ஸ்ரீ. ஆரூரன், மிருதங்கம் - ஸ்ரீ. கண்ணதாசன், வயலின் - ஸ்ரீ. திபாகரன், புல்லாங்குழல் ஸ்ரீ. பிரியந்த மற்றும் தாள தரங்கம் ஸ்ரீ.  ரட்ணதுரை ஆகியோரின் பங்களிப்புடன் அரங்கேற்றம் நடைபெறவுள்ளது.