சத்ரியன்

“எரிவாயு கலப்படம் செய்யப்படுகிறதா- கலவையில் மாற்றம்செய்யப்பட்டிருக்கிறதா அல்லது கிறிஸ் பூதம் போல இதுவும் ஒரு மறைகர விளையாட்டா?” 

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன்ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால், வீட்டின் சமையலறையை கூட பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று, செய்தியாளர்களைச்சந்தித்த போது, கூறியிருந்தார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்க.

எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு நாட்டைக் கிலிகொள்ள வைத்திருக்கின்றநிலையில், தான் அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, நாடு பாதுகாப்பற்றநிலையில் இருப்பதாகவும், நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை சீரழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி, தேர்தல் மேடைகளில் பிரசாரம் செய்து ஆட்சியைப்பிடித்திருந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

கோட்டாபய ராஜபக்ஷவை தவிர வேறெவராலும், நாட்டின் பாதுகாப்பைஉறுதிப்படுத்த முடியாது – நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று, ஆளும்தரப்பினர்அப்போது, பிரசாரம் செய்தனர்.

அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், குண்டுகள் வெடிக்காதளவுக்கு நாட்டின்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-05#page-6 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/