தேசியன்

தமிழ் முற்போக்குக்கூட்டணி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் சின்னமாக டோர்ச் லைட்  அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல்கள் கடந்த முதலாம் திகதி கூட்டணியின் தலைவரான பாராளுமன்றஉறுப்பினர் மனோ கணேசனால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டன.  

தமிழ் முற்போக்குக்கூட்டணியானது 2015 ஆம் ஆண்டு ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும்தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டால் உருவாக்கப்பட்டது.

6 வருடங்களில் இரண்டுபாராளுமன்றத் தேர்தல்களிலும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஒரு உள்ளூராட்சிதேர்தலுக்கு முகங்கொடுத்துள்ள கூட்டணி, பாராளுமன்றிலும் உள்ளூராட்சி சபைகளிலும்உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 

இந்த அமைப்பை  ஆரம்பத்தில் தேர்தல் காலகூட்டணியாக பலரும் பார்த்தாலும் கூட, இதன் தலைவர் மனோ கணேசன்   இரு கட்சிகளையும் இறுகப்பற்றி அரசியல் பயணத்தை முன்னெடுத்து இதை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்குபலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். 

அதற்கான தேவைஎழுந்ததற்குக் காரணம் தலைநகரைத் தவிர்த்து மலையக பிராந்தியங்களான நுவரெலியா,பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களிலேயே இக்கூட்டணிக்கான வாக்கு வங்கிகள் அதிகமாகஇருந்தன. 

முக்கியமாக நுவரெலியாமாவட்டத்தில் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் மூன்று உறுப்பினர்களை கூட்டணிபெற்றது. அதேவேளை பதுளை, கண்டி மற்றும் கொழும்பு மாவட்டத்தில் தலா ஒரு உறுப்பினரைதக்க வைத்துக்கொண்டது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-05#page-6 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/