மாவையின் அழைப்பும் அர்த்தமும்

By Digital Desk 2

07 Dec, 2021 | 02:48 PM
image

கபில்

“கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் இருக்கிறாரே தவிர அவரிடம்முழுக் கடிவாளமும் இல்லை என்பதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன”

மரணச் சடங்குகள் பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் பாலமாக, இருக்கும்என்ற நம்பிக்கை தமிழர்கள் பலரிடம்  இருக்கிறது.

புளொட் அமைப்பின் செயலாளராக இருந்த ஆனந்தி எனப்படும் சதானந்தனின்நினைவு நிகழ்வு, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போதும், அவ்வாறான ஒருஒற்றுமை முயற்சி குறித்துப் பேசப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் பேசிய தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்குபாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என்று அழைப்புவிடுத்திருக்கிறார்.

தந்தை செல்வா, அமிர்தலிங்கம் காலத்தில் சித்தார்த்தனின் தந்தைதர்மலிங்கம், கட்சிக்குள்ளேயும் வெளியேயும், ஏற்பட்ட நெருக்கடியான சூழல்களைசமாளிப்பதற்கு உதவினார் என்பதை நினைவுபடுத்திய மாவை, அவருடைய வழித்தோன்றலானசித்தார்த்தன், இன்றைக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடியான சூழ்நிலையில்,  தமிழ் தேசிய இனத்தின் நன்மை கருதி, சிதறிப் போயிருக்கும் தமிழர்தரப்புக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியை தலைமை தாங்கி கொண்டு செல்ல வேண்டும்என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதே நிகழ்வில் மாவைக்குப் பதிலளித்து உரையாற்றிய சித்தார்த்தன்,“அன்று இருந்த அரசியலுக்கும் இன்றுள்ள அரசியலுக்கும் வேறுபாடுகள் உள்ளதாகவும்,  மாவை, சுரேஷ், செல்வம் போன்ற அனைவரும் இணைந்து இந்த முயற்சியைஎடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-05#page-4 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right