கஞ்சா தேசம்

By Digital Desk 2

07 Dec, 2021 | 02:45 PM
image

என்.கண்ணன்

“ஆப்கானிஸ்தான் என்றால் பல நாடுகள் அலறிக் கொண்டு ஓடுவதற்கு  தலிபான்கள் அல்லது இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் மட்டுமல்ல, அதன்போதைப்பொருள் உற்பத்தியும் ஒரு காரணம்.இந்த நிலையை நோக்கித் தான் இலங்கையும்செல்லப் போகிறதா?”

ஒரு காலத்தில் தேயிலை, இறப்பர், வாசனைப் பொருட்கள் ஏற்றுமதியின்மூலம், நாட்டின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட்ட காலம் மாறி, இப்போது கஞ்சாஏற்றுமதியில் நம்பிக்கை வைக்கின்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கையாண்ட பொருளாதாரகொள்கை, அணுகுமுறைகளால், நாட்டின் பொருளாதார நிலை முன்னெப்போதும் இல்லாதளவுக்குவீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஏரான் விக்ரமரத்ன, நாட்டின்வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 1.2 பில்லியன் டொலர்களாக குறைந்திருப்பதாககூறியிருந்தார்.

இது ஒரு மாத இறக்குமதிகளுக்கு கூட போதாது எனவும் அவர்குறிப்பிட்டிருக்கிறார்.

நாட்டின் பொருளாதாரம் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் தான்,கடைசியாக கஞ்சாவையும், எரிவாயுவையும் கையில் எடுத்திருக்கிறது அரசாங்கம்.

வரவு,செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் தொடக்கத்தில் உரையாற்றியடயானா கமகே முன்வைத்த யோசனை பலத்த சர்ச்சைகளையும், அதேவேளை, பரவலாகவிவாதிக்கப்படும் ஒன்றாகவும் காணப்பட்டது.

“கஞ்சா இறைவன் எமக்கு கொடுத்துள்ள வரம். அதனைப் பயிரிட்டு உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதன் மூலம்நாட்டின் கடன்களை அடைக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது அந்த யோசனையை அரசாங்கம் அப்படியே தத்தெடுத்துக்கொண்டிருக்கிறது போலும்,

மருந்துப் பயிராக அதனை ஏற்றுமதி செய்வதற்கேற்ற வகையில் விரைவில்சட்டங்களில் திருத்தம் செய்யப் போவதாக சுதேச வைத்திய முறைகளின் மேம்பாட்டுஇராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்திருக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-05#page-3 

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right