குடந்தையான்  

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே உற்று நோக்கிய விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. மத்திய அரசு, விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கிறது. 

குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் இதற்கான சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போதும் விவாதமின்றி மக்களவையில் நிறைவேறியிருக்கிறது.

 இதனை விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பலரும் கொண்டாடுகின்றார்கள் என்பதை பலர் இன்னமும் உணர்ந்து கொள்வதற்கு தயாராக இல்லை. 

ஆனால் மூன்று வேளாண்மைச் சட்டத்தினை இரத்துச் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் உத்தரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களின் தேர்தல்களை அடிப்படையாக வைத்து காய்நகர்த்தி இருக்கின்றது 

அதேநேரம், தமது உரிமைகளுக்காக போராடிய விவசாயிகளில் 700இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது உறவுகளுக்கு என்ன பதிலளிக்கப்போகின்றது மத்திய அரசு என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. 

விவசாயிகள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்வைத்த கோரிக்கைகளை எதையும் அரசு ஏற்கவோ அல்லது அதை சட்டமாக்கவோ இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. 

இந்த விடயத்தில் தமிழக அரசு தமிழக மக்களுக்கு எவ்விதமான பதிலளிப்பைச்செய்யப்போகின்றது என்ற கேள்விகளும் இல்லமலில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-05#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/