கற்பிட்டியில் சட்டவிரோதமாக கடலாமையை பிடித்த மூவர் கைது

Published By: Digital Desk 3

07 Dec, 2021 | 01:06 PM
image

கற்பிட்டி கப்பலடி கடற்கரைப் பகுதியில் நேற்று (06) மாலை சூட்சுமமான முறையில் கடலாமையை உரைப் பையில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட மூவரை கைது செய்துள்ளனர். 

பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கற்பிட்டி, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த கடலாமை இறைச்சிக்காக பயன்படுத்துவதற்காக பிடிக்கப்பட்டதாக  பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த கடலாமை காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டமையினால் சிகிச்சையளிப்பதற்காக கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த கடலாமை ஒலிவ் நிற (Olive Redly) வகையைச் சார்ந்தது என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02